நாட்டை 'ஐக்கியப் படுத்தும்' சக்தியுள்ளவரே எங்கள் வேட்பாளர்: நாமல் - sonakar.com

Post Top Ad

Sunday 7 July 2019

நாட்டை 'ஐக்கியப் படுத்தும்' சக்தியுள்ளவரே எங்கள் வேட்பாளர்: நாமல்


வடக்கையும் - தெற்கையும் ஐக்கியப்படுத்தக் கூடிய சக்திவாய்ந்த ஒருவரே தமது தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.பெரமுன தரப்பு மைத்ரிபால சிறிசேனவை நிராகரித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதில் பெரமுன குறியாக இருக்கும் நிலையில் இவ்வாறு நாட்டை ஐக்கியப்படுத்தும் வல்லமையுள்ளவரை களமிறக்கவுள்ளதாக நாமல் தெரிவிக்கிறார்.

எனினும், ராஜபக்ச குடும்பத்திலேயே பெரமுன தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment