போதிய ஆதாரங்கள் இல்லை ஆனாலும் விசாரிக்கிறோம்: பிரதி சட்டமா அதிபர் - sonakar.com

Post Top Ad

Thursday, 11 July 2019

போதிய ஆதாரங்கள் இல்லை ஆனாலும் விசாரிக்கிறோம்: பிரதி சட்டமா அதிபர்


மருத்துவர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இல்லையென இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் ஷாபிக்கு தீவிரவாத குழுக்களிடமிருந்து நிதியுதவி கிடைக்கப்பெற்றதாகவும் அதேவேளை அவர் சட்டவிரோத கருத்தடையில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. எனினும், இவை எதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லையென பிரதி சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  மருத்துவர் ஷாபியை 3 மாத காலம் தடுத்து வைக்கும் தேவையில்லையெனவும் அதேவேளை விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment