உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் ACJU விஜயம் - sonakar.com

Post Top Ad

Wednesday 31 July 2019

உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் ACJU விஜயம்30.07.2019 ஆம் திகதி நடைபெற்ற சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய மாநாட்டிற்கு பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக இலங்கை வருகை தந்த உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் டாக்டர் அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா அவர்கள் இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்.இதன் போது வரவேற்பு மற்றும் அறிமுக உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் வழங்கினார்கள். இதன் போது ஜம்இய்யா தொடர்பாகவும், ஜம்இய்யாவிற்கும் உலக முஸ்லிம் லீக் அமைப்பிற்கும் இடையிலான உறவு தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் டாக்டர் அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா அவர்கள் இலங்கையில் ஜம்இய்யத்துல் உலமா ஆற்றி வரும் செயற்பாடுகள் தொடர்பாக தாம் சந்தோஷம் அடைவதாகவும், இதனுல் உள்வாங்கப்பட்டிருக்கும் தலைவர் மற்றும் செயலாளர் உற்பட ஏனைய நிறைவேற்று உறுப்பினர்களின் முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக நேற்றைய மாநாட்டில் ஜம்இய்யாவின் தலைவரின் சமயோசிதமான, அறிவுபூர்வமான மேலும் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு உட்பட்ட உரையை தான் பாராட்டுவதாகவும், மேலும் இன்று பொதுச் செயலாளர் ஆற்றிய உரை தொடர்பாகவும் தான் சந்தோஷப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் பல விடயங்களை குறிப்பிட்ட அவர்கள் ஜம்இய்யாவிற்கும் ராபிதாவிற்கும் இடையே தொடர்ச்சியான தொடர்புகள் அவசியம் என்பதையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி ரிஸ்வி அவர்கள் தங்களுடைய வரவு தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நாட்டில் உங்கள் வருகையை தொடர்ந்து சிறந்ததொரு சூழல் ஒன்று உருவாக தாம் பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் அகார் முஹம்மத் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யா சமாதானத்திற்காகவும் சகவாழ்விற்காகவும் முன்னெடுக்கும் முயற்சிகளை குறிப்பிட்டதுடன் உலகலாவிய ரீதியில்  உலக முஸ்லிம் லீக் அமைப்பு இதற்காக உழைப்பது போல் மேலும் இந்நடவடிக்கைகளுக்கு கைகோர்க்க வேண்டும் என குறிப்பிட்டார். ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கான அவரது வருகைக்கு நன்றி செலுத்தி தனது உரையை நிறவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து  உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் டாக்டர் அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா அவர்களுக்கான நினைவுச் சின்னமும், ஜம்இய்யாவிற்கான நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மேல்மாகாண ஆளுநர் கௌரவ முஸம்மில் அவர்கள் மற்றும் அரபு நாட்டு பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

-ACJU

No comments:

Post a Comment