10 வருடங்களில் நாட்டில் புத்திஜீவிகள் இருக்க மாட்டார்கள்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Friday 5 July 2019

10 வருடங்களில் நாட்டில் புத்திஜீவிகள் இருக்க மாட்டார்கள்: சம்பிக்க


சிங்கள சமூகத்திலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதாக தெரிவிக்கும் சம்பிக்க ரணவக்க, இதே நிலை தொடர்ந்தால் 10 வருடங்களில் நாட்டில் புத்திஜீவிகளே இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கிறார்.தற்போது, இலங்கைக்கு வெளியே அவுஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் பாரிய அளவில் சிங்கள சமூகம் குடியேறி வருவதாகவும் பெரும்பாலான இளைஞர்கள் அங்கு சென்றுவிடுவதாகவும் இதனூடாக இலங்கையில் எதிர்கால தலைமுறையினர், புத்திஜீவிகள் உருவாக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

நேற்றைய தினம் அவிஸ்ஸாவெலயில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் ஆட்சியாளர்களின் கொள்கைகள் எதுவாக இருந்தாலும் நாடு முன்னேற வேண்டும் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment