ஆமி முகைதீனுக்கும் ஷிப்லி பாரூக்குக்கும் தொடர்பு: முன்னாள் கா'குடி OIC - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 June 2019

ஆமி முகைதீனுக்கும் ஷிப்லி பாரூக்குக்கும் தொடர்பு: முன்னாள் கா'குடி OICசஹ்ரானுக்கு ஆயுத பயிற்சி வழங்கியதாக நம்பப்படும் ஆமி முகைதீன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்கோடு பணியாற்றிய நபர் என தெரிவித்துள்ளார் முன்னாள் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஆரியபந்து வதகேதெர.


நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளித்த நிலையிலேயே குறித்த நபர் இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது பதவிக்காலத்தின் போது சஹ்ரானின் நான்கு கூட்டங்களை நிறுத்தியதாகவும் ஏனைய மக்களோடு முறுகலில் ஈடுபட்டதன் பின்னணியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

யாருக்கு எப்படியாப்பா தெரியும் ஒருவரை வெளித்தோற்றத்தில் அவர் தீவிரவாதியா அல்லது நல்லவரா என்பது !!

Post a Comment