மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கப் போகும் முஸ்லிம் MPக்கள் - sonakar.com

Post Top Ad

Saturday, 15 June 2019

மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கப் போகும் முஸ்லிம் MPக்கள்


முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு அமைச்சுப் பதவிகள் துறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலும் அடுத்த வாரமளவில் மீண்டும் ஓரிரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முஸ்லிம் விவகார அமைச்சர் மற்றும் கபீர் ஹாஷிம் தமது பெரும்பான்மை வாக்காளர்களை மதித்து இம்முடிவை மேற்கொள்ளவுள்ள அதேவேளை ரவுப் ஹக்கீமும் இந்த பட்டியலில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்க வேண்டும் என மகாநாயக்கர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமையை 'மதித்து' இந்நடவடிக்கை இடம்பெறுவதாக விளக்கங்களும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment