மருத்துவர் ஷாபிக்கு எதிரான சட்டவிரோத கரு;த்தடைக்கலைப்பு விவகாரத்தின் பின்னணியில் தொடரப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில் 210 பக்க அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.
பாதிக்கப்பட்டதாகக் கூறுவோர் தரப்பிலிருந்து தொடுக்கப்பட்டிருந்த குறித்த வழக்குக்கு இன்று மருத்துவர் ஷாபி அழைத்து வரப்படாத நிலையில் வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடுனர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பெர்னான்டோ சுமார் 147 பெண்களை கொழும்பு பெரிய வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனைக்குட்படுத்த அனுமதி கோரியிருந்தார். இது பற்றி அடுத்த தவணையில் பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி விசாரணையை ஜுலை 11ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
வழக்கின் நிமித்தம் குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்ற சுற்றுப்புறத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பாதிக்கப்பட்டதாக தெரிவிப்போருடன் அத்துராலியே ரதன தேரர் உட்பட்டோர் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-இக்பால் அலி
No comments:
Post a Comment