
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் மற்றும் அதிலிருந்து பிரிந்து உருவான சிலோன் தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களிடம் இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நடாத்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சோனகர்.கொம் நேரலையில் சிலோன் தௌஹீத் ஜமாத் செயலாளர் அப்துல் ராசிக் இதனை உறுதி செய்திருந்த அதேவேளை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பும் இன்று விசாரிக்கப்படுவதற்கான முடிவு நேற்று நண்பகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இவ்விசாரணை இடம்பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு முன் கூட்டியே தாக்குதல் விபரங்கள் தெரிந்திருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்பது புலனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment