மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 14 பேரின் விளக்கமறியலும் மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 27ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் பின்னணியில் தேடப்பட்டு வந்த இப்ராஹிம் மௌலவியின் புதல்வர்கள் இருவரும் அண்மையில் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த தேடலின் போது கைது செய்யப்பட்டிருந்தனர்.
மாவனல்லை விவகார்தின் பின்னணியிலேயே புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் சோதனையிடப்பட்டமையும் அங்கு பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தமையும், இந்திய உளவு நிறுவனங்கள் தொடர்ச்சியாகத் தகவல் வழங்கியும் ஈஸ்டர் தாக்குதலை தடுப்பதற்கு அரசு நடவடிக்கையெடுக்காமல் இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment