ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி வருகிறது: ரதன தேரர் - sonakar.com

Post Top Ad

Saturday 22 June 2019

ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி வருகிறது: ரதன தேரர்


குருநாகல மருத்துவர் ஷாபிக்கு எதிரான சட்டவிரோத கருத்தடை குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி வருவதாக தெரிவிக்கிறார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.ஷாபியினால் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட முஸ்லிம் பெண்கள் மீண்டும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் சிங்கள பெண்களுக்கு மீண்டும் மகப்பேறு இல்லாமல் போயுள்ளதாகவும் ரதன தேரர் நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை அல்குர்ஆனில், முஸ்லிம் அல்லாதோரை கொன்றுவிட வேண்டும் என தெரிவித்திருப்பதாக ரதன தேரர் தெரிவித்தமை உண்மைக்குப் புறம்பானது என மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் மறுதலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment