அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 22 June 2019

அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு


நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பி விட்டதாகவும், அனைத்து தீவிரவாத செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் அவசர கால சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் தற்போது அமுலில் இருக்கும் அவசர கால சட்டம் ஜுலை 22ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அவசரகால சட்டம் அமுலுக்கு வந்ததுடன் பெருமளவு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment