திகன - மடவளை - மெனிக்ஹின்ன - மாத்தளை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Monday 3 June 2019

திகன - மடவளை - மெனிக்ஹின்ன - மாத்தளை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை


கண்டியில் ரதன தேரருக்கு ஆதரவாக வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக நேற்றைய தினம் சிங்கள வர்த்தகர்களின் சங்கமொன்று அறிவித்தல் விடுத்ததோடு அங்கு பெருந்தொகையான ஆதரவாளர்கள் குழுமியுள்ள நிலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களிலும் வர்த்தக நிலையங்களை பூட்டி விடுமாறு பள்ளி நிர்வாகங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.திகன, மெனிக்ஹின்ன பகுதிகளில் ஏலவே இவ்வாறு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது மாத்தளை, உக்குவளை மற்றும் மடவளை பகுதிகளிலும் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் இரு ஆளுனர்கள் மற்றும் ரிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கையில் ரதன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு நல்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment