பல்செயற்றிறன் மீன்பிடித் துறைமுகங்கள்: கொரியாவில் செயலமர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 25 June 2019

பல்செயற்றிறன் மீன்பிடித் துறைமுகங்கள்: கொரியாவில் செயலமர்வு


கொரியாவில் சென்ற 23 ஆம் திகதி ஆரம்பமான பல்செயற்றிறன் கொண்ட (Multifunctional) மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பது தொடர்பான விஷேட செயலமர்வில், இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி உள்ளிட்ட குழு பங்குபற்றியுள்ளது.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்நிகழ்வு 23 - 29 வரை கொரியாவின் சியோல் மற்றும் பூஸான் நகரங்களில் நடைபெறுகிறது. 

இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் 2016 கொரிய விஜயத்தின் போது இலங்கையின் முதலாவது பல்செயற்றிறன் கொண்ட மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தில் கைச்சாத்திடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த பல்செயற்றிறன் கொண்ட மீன்பிடித் துறைமுக எண்ணக்கரு உலகிற்கே புதியதாகும்.

இந்த எண்ணக்கருவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி அவர்களாவர்.

மேற்படி செயலமர்வில் கலந்து கொள்ள இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சியுடன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் விக்ரமசிங்க, இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தினேஷ் குமார, இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்தின் பொறியியல் முகாமையாளர் நிசாந்த விக்ரமசூரிய உள்ளிட்டவர்கள் கொரியா சென்றுள்ளனர். 

-ரிஹ்மி ஹக்கீம்,

No comments:

Post a Comment