மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் தொழிற்சங்கம் - sonakar.com

Post Top Ad

Sunday, 30 June 2019

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் தொழிற்சங்கம்


இலங்கை மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகத்தை இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கம்.எரிபொருள் விநியோக குழாயினை நிர்மாணிப்பதற்கு ஏற்பட்டிருக்கும் தடைக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவே இதற்குத் தடையாக இருப்பதாகக் கூறியே தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமையும் கூட்டாட்சி அரசில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment