பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 15 June 2019

பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு


பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை அநுராதபுர மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலையடுத்து வெசக் நிகழ்வுகள் களையிழந்து போயிருந்தது. எனினும், அரசாங்கம் உத்தரவாதம் வழங்கி ஊக்கப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது பொசன் நிகழ்வுகளின் போது ஏதும் அனர்த்தங்கள் நிகழ்ந்து விடக்கூடாது எனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதியளவில் கண்டி பெரஹர இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment