இதுவரை ரிசாத் பதியுதீனுக்கு எதிராக மாத்திரம் ஒரேயொரு முறைப்பாடு ! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 June 2019

இதுவரை ரிசாத் பதியுதீனுக்கு எதிராக மாத்திரம் ஒரேயொரு முறைப்பாடு !


அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவிடம் நேற்றிரவு வரை ஒரேயொரு முறைப்பாடே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அதுவும், குறித்த முறைப்பாடு ஏலவே சொல்லப்பட்டது போன்று தீவிரவாதத்தோடு தொடர்புடையதன்றி சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் சிங்கள வர்த்தகர்கள் மீது பாரபட்சம் காட்டியதான குற்றச்சாட்டே பதிவாகியுள்ளதாக அறியமுடிகிறது.

எதிர்வரும் 12ம் திகதி வரை முறைப்பாடுகளை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment