குருநாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் மேலும் ஒரு வைத்தியர் மீது புதிய குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், போதிய அனுபவம் மற்றும் தகைமையின்றி சிசேரியன் சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும் மருத்துவராக நியமனம் பெற்று ஆறு மாதங்களிலேயே இவ்வாறு பொறுப்புவாய்ந்த பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்தாகவும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களால் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் ஏலவே கைதாகியுள்ள மருத்துவர் ஷாபியின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment