முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Saturday 1 June 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்சிங்ஹலே பலமண்டலய ஜக்கிய இராச்சியம்  மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் அமைப்புகளின் பெயரில் இன்று பி.ப. 3.00 மணியளவில் கொழும்பு விக்டோரியா பாா்க் முன்றலில்  ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.இதன் போது ஆளுனர்கள் ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என கோசம் எழுப்பப்பட்டதோடு பதாதைகளும் ஏந்தப்பட்டிருந்தன.


குறித்த அரசியல்வாதிகள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment