
முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பாரிய நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் சமூக வலைத்தள பாவனையாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தவறான ஒரு மொழிபெயர்ப்பே சிலாபம் வன்முறைக்குத் தூண்டுகோளாக அமைந்திருந்த வடுக்கள் மாறாத நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாரிய அளவில் நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டு முஸ்லிம் சமூகம் அழுத்தத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுத்து வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தள பாவனையாளர்கள் தமது நடவடிக்கைகள் ,கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் குறித்து பொறுப்புடனும் விழிப்புடனும் நடந்து கொள்வது அவசியமாகிறது.
கருத்து சுதந்திரத்தை பேணுதல், உரிமையைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்கு அப்பால் நாம் எதிர்கொள்ளும் சமூக சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, தேவையற்ற கருத்தாடல்கள், கேலிச் சித்திரங்கள் போன்றவற்றை தவிர்ந்து கொள்வதுடன் ஸ்மைலி பதிவுகளின் போதும் அவதானமாக நடந்து கொள்ளுதல் அவசியமாகிறது.
இலங்கையில் வாழும் 10 வீத முஸ்லிம்களில் 75 வீதமானோர் நாட்டின் பல பகுதிகளிலும் சிறு சிறு கிராமங்களில் செறிந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment