ரதன தேரரை பார்வையிட்ட கார்டினல் ரஞ்சித் - sonakar.com

Post Top Ad

Monday 3 June 2019

ரதன தேரரை பார்வையிட்ட கார்டினல் ரஞ்சித்


முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி நீக்கப்பட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துராலியே ரதன தேரரை சென்று பார்வையிட்டுள்ளார் கார்டினல் மல்கம் ரஞ்சித்..ஈஸ்டர் தாக்குதலின் பின்புலம் தொடர்பில் விரிவான விசாரணை நடாத்தி, உதவி செய்தவர்கள் தூண்டுதலாக இருந்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவே ரதன தேரர் கோரிக்கை விடுப்பதாக கார்டினல் விளக்கமளித்துள்ளார்.

ஏலவே, தாக்குதல்தாரிகள் அடையாளங்காணப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இரு முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment