வசீம் கொலை விவகாரத்தின் முதலாவது சந்தேக நபர் விடுதலை - sonakar.com

Post Top Ad

Friday, 28 June 2019

வசீம் கொலை விவகாரத்தின் முதலாவது சந்தேக நபர் விடுதலை


வசீம் தாஜுதீன் கொலை வழக்கு விவகாரத்தில் முதலாவது சந்தேக நபராக இணைக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நாரேஹன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா அவ்வழக்கிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.மஹிந்த அரசில் விபத்தென மூடி மறைக்கப்பட்ட குறித்த சம்பவம் கொலையெனக் கண்டறிந்ததாக தெரிவித்த ரணில் - மைத்ரி கூட்டணி அரசு இவ்விவகாரத்தை பரபரப்புக்குள்ளாக்கி அரசியல் இலாபமடைந்திருந்தது. 2016 ஜனவரிக்குள் தீர்ப்பு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர் இழுபறிக்குள்ளாகி வந்த நிலையில் இன்று குறித்த நபரை விடுவித்துள்ளது நீதிமன்றம்.

2015 ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் பேசுபொருளானதுடன் புதைக்கப்பட்டிருந்த உடலும் தோண்டியெடுக்கப்பட்டு இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment