முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட வேண்டும்: ஜி.எல் - sonakar.com

Post Top Ad

Tuesday 4 June 2019

முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட வேண்டும்: ஜி.எல்


அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டிருப்பதே தீவிரவாதம் வளர்வதற்கு காரணம் என தெரிவிக்கிறார் பொது ஜன பெரமுன பினாமி தலைவர் ஜி.எல்.பீரிஸ்.



இலங்கையிலே கடந்த வருடம் 130 வெளிநாட்டு முஸ்லிம் போதகர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதுடன் ஏலவே நாட்டில் உள்ள 305 பேரது விசா நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் 1680 மத்ரசாக்கள் இயங்குகின்ற நிலையில் அரசு முறையான கண்காணிப்பை மேற்கொள்ளவில்லையென்பதே புலப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரேபிய தொடர்புகளும் பாரதூரமான விடயங்கள் எனவும் அவை கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமையும் மஹிந்த ராஜபக்சவுக்கு அவசியப்பட்ட போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஜெனிவா சென்று கொடி தூக்கி அவருக்கு ஆதரவளித்ததோடு முஸ்லிம் நாடுகளிடம் நல்ல முறையில் எடுத்துச் சொல்லி ஆதரவு பெற முஸ்லிம் அரசியலே பயன்பட்டிருந்தமையே தேவைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment