இந்தியா - இலங்கை: இனவாத அரசியலுக்கு நல்ல அறுவடை - sonakar.com

Post Top Ad

Sunday 2 June 2019

இந்தியா - இலங்கை: இனவாத அரசியலுக்கு நல்ல அறுவடை


இந்தியாவில் நடக்கின்ற தேர்தல் முடிவுகள் பற்றி சில குறிப்புக்களை  முன்னரே அடித்துச் சொல்லி இருந்தோம். அப்போது  வேட்பு மனுக்கள் கூட இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'என்னதான் கூட்டுக்கள் போட்டாலும் தேசியளவில் மோடி ஏனைய கூட்டணிகளுக்கு வலுவான போட்டியாளராகவே இன்றும் இருந்து வருகின்றார். தமிழகத்தில் ஸ்டாலின் ரஷ்யாவில் போல் இந்த முறை உறுதியாக இருக்கின்றார். கமல் எதிர்பார்ப்பது போல் தமிழகத்தில் அவருக்கு நீதி கிடைக்குமா என்ற விடயத்தில் எமக்கு நிறையவே சந்தேகங்களும் நம்பிக்கையீனங்களும் இருந்து வருகின்றன.' இது நாம் அன்று சொன்ன வார்த்தைகள்.

இப்போது தலைப்புக்கு வருவோம். 

இலங்கை என்னதான் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட நாடு என்று சொல்லிக் கொண்டாலும் அது பௌதீக, சமய, கலை, கலாச்சரா மற்றும் அரசியல ரீதியாக  இன்னும் இந்தியாவின் பிடியிலிருந்து முற்றும் முழுதாக விடுதலை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் இந்தியா இஸ்லாமியர்களது ஆக்கிரமிப்புக்கும் ஆட்சிக்கும் இலக்காகி வந்திருக்கின்றது. அதன் தாக்கங்கள் இன்றும் இந்தியாவில் பரவலாகக் காணப்படுக்கின்றன. இது தொடர்பான சாதக பாதக விமர்சனங்கள் இப்போதும் அங்கு முற்றுப் பெறாமல் தொடர்கின்றது.

இன்று இந்தியாவின் குடித் தொகையை எடுத்துக் கொண்டால் அங்கு 130 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் 104 கோடி இந்துக்களும் 18க் கோடி முஸ்லிம்களும் (அதனால்தான் உலகில் இரண்டாவது பெரிய முஸ்லிம் நாடு என்று இந்திய அழைக்கப்படுகின்றது. 4 கோடி கிருஷ்தவர்களும் 2 கோடி சிக்கியரும் அங்கு வாழ்கின்றனர்.

இன ரீதியாக இந்துக்கள் 80 சதவீம் முஸ்லிம்கள் 14 சதவீதம் கிருஷ்தவர்கள் 2.3 சதவீம் சீக்கியர் 2 சத வீதம் இதர 1.7 சதவீதம்  என்று அமைகின்றது. இதன் படி 543 லோக்சபா உறுப்பினர்களில் இனவீதப்படி இந்துக்கள் 434, முஸ்லிம்கள் 76, சீக்கியர் 12, கிருஷ்தவர் 11, இதர 9. என்று அமைய வேணடும். ஆனால் ஒரு போதும் அது அப்படி அமையவில்லை.

இப்போது இந்தியாவின் அரசியல் போக்கை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் இந்திரா காந்தி என்பது எமது கருத்து. இது தொடர்ப்பில்  மாறுபட்டகருத்துக்கள் இருக்கலாம். 

இந்திய அரசியலில் அடுத்தடுத்து இரு முறை அதிகாரத்தில் அமர்ந்தவர் என்ற பெறுமையும் அவருக்கு இருந்தது. ஆனால் இன்று அதற்கு ஒரு போட்டியாளராக தற்போதய பிரதமர் நரேந்திர மோடி வளர்ந்திருக்கின்றார். இந்திரா ஒரு தாரான்மைவாதியாக அரசியல் செய்தவர் ஆனால் மோடி சற்று கடும்போக்கு அரசியல்வாதி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் தற்போது தாரான்மைவாதி அரசியலுக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கின்றது என்பது எமது கணிப்பு. இதனால் இந்துத்துவாதத்துக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் செய்கின்ற மோடிக்கு நடந்து முடிந்த தேர்தலில் நல்லதொரு வெற்றி கிடைத்திருக்கின்றது. எனவே இந்தியாவில் இந்துத்துவ வாதம் அரசியலில் மிகப் பெரிய அறுவடைகளைக் கொடுத்துக் கொண்டு வருகின்றது.

இந்தத் தேர்தலில் பொருளாதரா வீழ்ச்சி, வேலையில்லாப் பிரச்சினை, விவாசயிகள் பிரச்சினைகளை என்று மோடி எதிர்ப்பாளர்கள் முன்னெடுத்த எந்தப் பிச்சாரமும் வாக்காளர் மத்தியில் எடுபவில்லை. எனவே மோடி தனிப்பெரும் கட்சியாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும் சாதனை படைத்திருக்கின்றார். 

இந்திய மக்களின் எதிர்பார்ப்பான வலுவான இந்தியா என்பது மோடியின் இலக்கு வெற்றிபெறுமாக இருந்தால் காந்திக்கு அடுத்த நிலை இந்திரா என்ற எமது கருது எதிர்காலத்தில் தோற்ப்போக இடமிருக்கின்றது. எனவேதான் எதிர்க் கட்சிகளின் நாம் முன்பு சொன்ன கோஷங்களை மக்கள் கண்டு கொள்ளாமல் மோடிக்கு இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கி வாய்ப்பு வளங்கி இருக்கின்றார்கள் என நாம் கருதுக்கின்றோம்.

இந்தியாவுக்குத் தேவைப்படுவது சீனாவுக்கு சமாமான அல்லது அதனை விஞ்சிய ஒரு இராணுவ வல்லமை.  மேற்கில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சமாளித்தல். கஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஒரு முற்றுப் புள்ளிவைத்தல். இப்போது மோடிக்கு அந்த இலக்கை நோக்கி பயணிக்க மக்கள் வாய்ப்பை வழங்கி இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. 

இந்துத்துவக் கட்சியொன்று இந்தளவுக்கு பாராதத்தில் வலுவடைவதற்கு பாகிஸ்தான் மற்றும் இந்திhவிலுள்ள முஸ்லிம்களுமே காரணம் என்பது கட்டுரையாளனது கணக்கு. அப்படியானால் சீனா இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல் இல்லையா என்று கேட்கலாம். சீனா மத ரீதியில் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக இல்லை அங்கு இராணுவ ரீதியிலான ஒரு அச்சுறுத்தலே முக்கியத்தவம் பெறுகின்றது.

உள்நாட்டில் தற்போது ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவிலும் அவர்கள் பாரிய தாக்குதல்களை எதிர்காலத்தில் நடாத்த இடமிருக்கின்றது. இதனையும் சமாளிக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கின்றது. 

என்னதான் இலவசம் இலவசம் என்று காங்கிரஸ் அள்ளித் தரப்போகின்றறோம் என்று தோதல் விஞ்ஞாபனம் வெளியிட்டாலும் அது எதுவுமே எடுபடவில்லை. வடக்கில் தான்போட்டியிட்ட ஆமோதித் தொகுதியிலேயே ராகுல் தோற்றுப் போயிருப்பது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியாகவுள்ளது.

அத்துடன் வாரிசு அரசியல் இந்தியா மக்களால் நிராகரிக்ப்பட்டிருக்கின்றது என்பதும் எமது கருத்து. பிரியங்காவைக் கட்டி வாக்குப் பெட்டிகளை நிறைக்கலாம் என்ற காங்கிரஸ் எதிர்பார்ப்பு பெரும் ஏமாற்றத்தில் போய் முடிந்திருக்கின்றது எனவே இந்த தோல்வியிலிருந்து காங்கிரஸ் விடுபட பல வருடங்கள் பிடிக்கும் என்று நாம் கருதுகின்றறோம்.

தோல்வியைத் தொடர்ந்து ராகுல் காந்தி இராஜினாமச் செய்ய முயன்றாலும் இப்போததைக்கு அது அவசிப்படாது என்று சோனியா தடுத்தவிட்டிருக்கின்றார். காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியை விட மிகப் பெரிய பின்னடைவை இடதுசாரிகள் சந்தித்திருக்கின்றார்கள். 

இவர்கள் கோட்டைகள் அனைத்தும் மோடியின் இந்துத்துவ அலையால் தகர்த்து எறியப்பட்டுள்ளது. எனவேதான் வெறும் ஐந்தே ஐந்து இடங்களில் கம்யூனிட்டுக்கள் இந்த முறை வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அதுவும் திமுக துனையுடன் தமிழகத்தில் அவர்கள் 4பேர் கரை சேர்ந்திருக்கின்றார்கள். கேரளவில் ஒருவர் மொத்தம் ஐந்து பேர் மட்டும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். மேற்கு வங்கத்தில் அவர்கள் பூண்டுhடு பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு தோல்வியை அவர்கள் ஒரு பொதும் எதிர்பார்க்கவில்லை.

இந்திய அரசியலில் இந்துத்துவ வாதம் தற்போது மேலோங்கி அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பொதுத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்ட பாராதிய ஜனதா அன்று வெரும் இரண்டு ஆசனங்களை மட்டுமே கைப்பறியது அப்போது எவரும் இந்திய அரசியலில் இவர்கள் இந்தளவுக்கு ஆதிக்கம் செழுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

மோடி வெற்றிபெறுவதற்கு முன்னரே அவர் வெற்றிபெற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  வேண்டிக் கொண்டிருந்தார். இது பாக். உளவுத்துறை முன்கூட்டியே இந்த வெற்றியை அறிந்து வைத்திருந்தது என்பது எமது கருத்து. பாகிஸ்தான் தலைவர்களில் இம்ரான் சற்று வித்தியாசமாக காய் நகர்த்துக்கின்றார் என்று நாம் கருதுக்கின்றோம். 

இந்தியா- பாகிஸ்தான் நல்லுறவிலேயே இரு நாடுகளுக்கு வளமான எதிர்காலம் இருக்கின்றது என்பது அவர் நிலைபாபடாக இருக்கின்றது. மோடியைத் தொலை பேசியில் தொடர்பு கொண்ட இம்ரான் தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கின்றார் பதிலுக்கு தனது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் பாக்.பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்று சொல்லப்பட்டது ஆனால் பிந்திய செய்தி அப்படி ஒரு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று தெரிகின்றது.

அப்படி அமையுமாக இருந்தால் இது தெற்காசியாவின் எதிர்காலத்திற்கு நல்ல சமிக்ஞை என்று எதிர்பார்க்க முடியும். என்றாலும் இரு பக்கத்திலுள்ள கடும்போக்காளர்கள் இதனைச் சிதைப்பதற்கு முயலவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியும். இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மோடி வருகின்ற ஐந்து வருடங்களில் இந்திவுக்குக் கொடுக்கின்ற தலைமைத்துவம்  உலகலவிய ரீதியில் இந்தியாவின் செல்வாக்கை பலமடங்கு மேன்மைப்படுத்தும் என்ற எதிர்பார்க்க முடியும்.

தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் மோடியின் இந்துத்துவவாதம் வெற்றிபெறமல் போனது அரசியல் வாட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இன்னும் இரண்டு வருடங்களில் நடக்க இருக்கின்ற தமிழக மனிலங்கலவைத் தேர்தலில் இதற்கு ஒரு வைத்தியத்தை மோடி கொடுக்க இருக்கின்றார். 

தமிழகத்திலுள்ள ஒட்டுமொத் பஜகாவையும் மோடி மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கின்றார். மோடியுடன் மிகவும் நெருக்கமான உறவை வைத்தக் கொண்டுள்ள ரஜினி பற்றி இப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பாஜாவுக்கு தமிழ் நாட்டில் ஒரு கவர்ச்சி தேவைப்படுகின்றது. வடக்கில் மோடி செல்வாக்கும் தெற்கில் ஒரு கவர்ச்சியும் வைத்துத்தான் இந்தப்பயணம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. 

இப்போது மோடிக்கு இந்துத்துவம் போன்று மஹிந்தவுக்கு பௌத்தவாதம் எப்பப அமையப்போக்கின்றது என்று பார்ப்போம். இந்தியாவில் இந்துத்துவ வாதம் அங்கு நெடுநாளாக இருந்து வருவதுதால் அவர்களை லாவகமாக வைத்து அரசியல் செய்வதில் இந்துத்துவவாதிகள் வெற்றி பெற்றார்கள் எப்பதனை விட அதனை வைத்து ஒரு பலமான இந்தியாவை நோக்கியே மோடி பயணிக்க முனைக்கின்றார். 

இலங்கையில் நிலமை சற்று வேறு இந்தியா தற்போது பலவிடயங்களில் வளர்ச்சியடைந்து விட்டது. உலகிலேயே நான்காதுவது பெரிய இராணுவத்தை அது வைத்திருக்கின்றது. பொருளாதாரம், விவசாயம், தொழிநுட்பம், என்ற இன்னோரன்ன விடயங்களில் அது தனது சொந்தக்காலில் நிற்கின்றது. வெளிவிவகாரத்தை பொருத்த வரையிலும் எல்லா இடங்களில் அமெரிக்காவின் கால்கலில் போய் மண்டியிடுக்கின்ற நிலையில் இந்தியா இல்லை. உலக அரங்கில் மோடிக்கு என ஒரு தனி இடம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

நமது நாட்டில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட் பின்னர் நாட்டில் இனவாதம் காட்டுத் தீ போல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. அதனால் போசிக்கபடுகின்ற பெரும்பான்மை மக்கள் சிறுபான்மைச் சமூகங்கள் மீது கடுமையாகவும் மூர்க்கத்தனாகவும் நடந்து கொண்டு வருவiதை கடந்த பல வருடங்களாக பார்க்க முடிக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இனவாத உணர்வு இங்கு பௌத்தவாதத்ததை தட்டி எழுப்பி வருகின்றது.  எனவே இதனால் அரசியல் ரீதியில் அதிக நன்மை அடைக்கின்ற தலைவராக ராஜபக்ஸா இருந்து வருகின்றார். நாட்டில் இனத்தின் பேரிலும் மத்தின் பேரிலும் அரசியலை முன்னெடுக்கும் உரிமை உள்ள இந்த நாட்டில் அதனை வைத்து ஒருவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிபக் கொள்ள வியூகம் வகுப்பதை தவறு என்று எவரும் சொல்ல முடியாது.



ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து  அரசியல் சூழ்நிலை மஹிந்த ராஜபக்ஸாவுக்கு மிகப் பெரிய அறுவடையைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய பின்னணியையே நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கும் இது மிகப் பெரிய பாதிப்பை உண்டு பண்ணி விட்டது. இதற்கு ஏற்ற விதமாக மஹிந்த ராஜபக்ஸா தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு பிள்ளைiயுயும் கிள்ளி லாவகமாக தற்போது காய்களை நகர்த்தி வருகின்றார்.

இலங்கை பொருளாதர நெருக்கடி, பணவீக்கம், செங்குத்ததாக சரிந்து செல்கிக்னற வெளிநாட்டுப் பணப் பெருமதி. உள்நாட்டில் பொருளாதரார உற்பத்தி அல்லது விவசாயப் பொருட்களில் தன்னிரைவு என்பது எல்லாம் நமக்கு எட்டக்கனியாக இருந்து வருகின்றது. இதற்கு மத்தியில் நாட்டில் புரையோடிப்போய் இருக்கின்ற இனப்பிரச்சினை. மற்றும் புதிதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் வன்முறைகள் நாட்டைப் பாதளத்துக்கே இன்று  தள்ளிப்போட்டிருக்கின்றது.

இந்தியாவில் மோடிக்கு இந்துத்துவவாதம்  இலங்கையில் மஹிந்த ராஜபக்ஸாவுக்கு பௌத்த வாதமும் பதவிக்குவர நல்ல வாய்ப்பாக அமையலாம். ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் நாம் எழுதி இருந்த கட்டுரைகளில் புள்ளிவிபர ரீதியாக நமது நாட்டின் அரசியல் செல்வாக்கை வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம். எனவே மீண்டும் மீண்டும் அதனை இங்கு சொல்ல வேண்டிதில்லை. 

சுருக்கமாக சொல்வதானால் ராஜபக்ஸா வாய்ப்பு மேலும் திறந்து விடப்பட்டிருக்கின்றது என்றுதான் எமக்குத் தெரிகின்றது. சிறுபான்மை வாக்குகளை அரவே நம்பாது வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதே ராஜபக்ஸாக்களின் இலக்காக இருக்கும். ஆனால் இந்த நாட்டிலுள்ள பெருளாதார நெருக்கடி ராஜபக்ஸாக்களுக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றக் கருத்தக்கள் இருக்க முடியாது.

சீனா இலங்கைக்கு நல்ல நண்பனாக இருக்கலாம் ஆனால் இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளையும் அந்த நாட்டால் தீர்த்துவைக்க முடியாது என்பதும் உறுதி. எனவே மேற்கு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை அவர்கள் எதிர்பார்க்க வேண்டி இருக்கும். 

ஈஸ்டர் தாக்கதலுடன் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ற கோஷம் கோமா நிலைக்குச் சென்றுவிட்டது என்பது எமது கருத்து. இதற்கு முன்னர் கூட அது நோயாளியின் நிலையில்தான் இருந்தது என்பது எமது அளவீடாக இருந்தது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 

தேர்தல்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்த நிற்க்கின்ற இந்த நேரத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது பற்றி பெரும்பான்மை அரசியல்வாதிகள் எப்படிக்குரல் கொடுக்கப்போகின்றார்கள்.? சம்பந்தது ஐயாவோ தீர்வு... தீர்வு... என்று உச்சரித்துக் கொண்டே இருக்கின்றார்.! 

-நஜீப் பின் கபூர்

No comments:

Post a Comment