மைத்ரி தலைமையிலான வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இரத்து - sonakar.com

Post Top Ad

Tuesday 11 June 2019

மைத்ரி தலைமையிலான வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இரத்து


ஜனாதிபதி தலைமையில் வாராந்தம் இடம்பெற்று வந்த அமைச்சரவைக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விசாரணை முடியும் வரை நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 7ம் திகதி ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றிருந்த அதேவேளை நேற்றைய தினம் பிரதமர் தலைமையிலான வாராந்த சந்திப்பு நேற்று மாலையிலிருந்து நள்ளிரவு வரை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் அமைச்சரவை கூட்டம் அவரது உத்தரவின் பேரில் நடைபெறவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment