ஜனாதிபதியாவதற்கு எனக்கு முழுத் தகுதியுண்டு: திஸ்ஸ - sonakar.com

Post Top Ad

Thursday, 20 June 2019

ஜனாதிபதியாவதற்கு எனக்கு முழுத் தகுதியுண்டு: திஸ்ஸஇலங்கையின் ஜனாதிபதியாக வரும் முழுத் தகுதியும் தனக்கிருப்பதாக தெரிவிக்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க.நீண்ட காலம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க 2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திடீரென மஹிந்த அணிக்குத் தாவி தனது அரசியல் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டார்.

இந்நிலையில், தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் அவ்வப்போது கருத்து தெரிவிக்கும் அவர், கட்சி சார்பில் புதிய முகம் ஒன்றே ஜனாதிபதி வேட்பாளராக வர வேண்டும் என (ரணில் இல்லாத) தெரிவிப்பதோடு தனக்கும் முழுத்தகுதியிருப்பதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment