ரத்னபுர: போலி ஆவண தொழிற்சாலை முற்றுகை; இருவர் கைது - sonakar.com

Post Top Ad

Sunday 23 June 2019

ரத்னபுர: போலி ஆவண தொழிற்சாலை முற்றுகை; இருவர் கைது


போலி அரச ஆவணங்களைத் தயாரித்து வந்த அச்சகம் ஒன்றுடனான தொழிற்சாலையொன்று நேற்றைய தினம் ரத்னபுர, வெல்லவாய பகுதியில் முற்றுகையிடப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.காணி உறுதிகள், மின்சார கட்டணப் பற்றுச்சீட்டுகள், போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திரங்கள் என பல்வேறு போலி ஆவணங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரத்னபுர பகுதியில் வசித்து வரும் 63 வயது நபர் ஒருவரின் வீட்டின் இரகசிய அறையொன்றிலேயே இவ்வாறு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment