கண்டி - கம்பளை - தம்புள்ள உட்பட சில இடங்களில் ஊர்வலம் - sonakar.com

Post Top Ad

Monday, 3 June 2019

கண்டி - கம்பளை - தம்புள்ள உட்பட சில இடங்களில் ஊர்வலம்


அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுனர்கள் அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் எனக் கோரி அத்துராலியே ரதன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதத்தையடுத்து கண்டி, தம்புள்ள உட்பட சில இடங்களில் கடும்போக்குவாத சக்திகள் ஊர்வலம் நடாத்தியுள்ளனர்.கண்டி நகரில் இன்று வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ள நிலையில், வெளியிலிருந்து வருபவர்கள் பிரயாணத்தைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கம்பளை பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் விழிப்புடன் இருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான இடங்களில் தற்சமயம் அமைதியான முறையிலேயே ஊர்வலம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment