தெரிவுக்குழுவை கலைக்க ஜனாதிபதிக்கு உரிமையில்லை: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 June 2019

தெரிவுக்குழுவை கலைக்க ஜனாதிபதிக்கு உரிமையில்லை: பொன்சேகா


ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் விசாரணைகளை நடாத்தி வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை கலைப்பதற்கு ஜனாதிபதி முயல்வதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவ்வாறு அதில் தலையிட அவருக்கு உரிமையில்லையென தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.நாடாளுமன்றம் ஊடாக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு சட்டபூர்வமானது எனவும் அதன் விசாரணை முடிவில் உண்மைகள் புலப்படும் எனவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு ஒரு தெரிவுக்குழு அமைக்கவோ அதனூடாக புலனாய்வுத்துறை அதிகாரிகளை விசாரிக்கவோ அனுமதிக்கக் கூடாது எனும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment