கல்முனையில் இரண்டாவது நாளாகவும் 'உண்ணாவிரதம்' - sonakar.com

Post Top Ad

Tuesday 18 June 2019

கல்முனையில் இரண்டாவது நாளாகவும் 'உண்ணாவிரதம்'



கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதமொன்று நேற்று காலை 10.30 மணி முதல் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆரம்பித்து இரண்டாம் நாளாகவும் இன்று இடம்பெற்று வருகிறது.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார்அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன் அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு. இந்த உண்ணாவிரப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தில் பிரதேச சமூக நல  அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் எங்கள் விடயத்தில் பொடுபோக்காக இருப்பதாகவும் உடனடியாக இந்த விடயத்தை கவனத்தில்கொண்டு தீர்வது காணும் விதமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளான இன்று அதிகளவிலான கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்களும், தமிழ் குருக்களும்,கிறிஸ்தவ மதபோதகர்களும் கலந்துகொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதுடன் பிரதேச மக்கள் மற்றும்  அதிகளவிலான  இளைஞர்கள் போராட்ட களத்தில் இவர்களுக்கு ஆதரவாக குழுமியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

- நூருல் ஹுதா உமர் 

No comments:

Post a Comment