கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை.
மகரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய இடங்களிலேயே நீர் வெட்டு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத் திட்டத்தின் கீழ் நீர் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment