18ம் வேண்டாம் 19ம் வேண்டாம்: மைத்ரி விசனம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 June 2019

18ம் வேண்டாம் 19ம் வேண்டாம்: மைத்ரி விசனம்!


இலங்கை அரசியல் யாப்பின் 18 மற்றும் 19ம் திருத்தச் சட்டங்களை முற்றாக நீக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.18ம் திருத்தச் சட்டம் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாகும் வாய்ப்பினை ஏற்படுத்தும் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்த நிiலில் 19ம் திருத்தச் சட்டம் அதற்குத் தடையாக கூட்டாட்சி அரசில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 18ம் திருத்தச் சட்டம் சர்வாதிகாரத்துக்கு ஏதுவாக அமைந்த அதேவேளை 19ம் திருத்தச் சட்டம் உறுதியான அரசு அமைவதற்குத் தடையாக இருப்பதாகவும் மைத்ரி  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 19ம் திருத்தச் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதன் பின்னணியில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய மைத்ரிபால சிறிசேன, கடந்த ஒக்டோபர் 26ம் திகதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தமையும் உச்ச நீதிமன்றம் அந்த நியமனத்தை நிராகரித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment