முஸ்லிம் பெண்கள் ஆடை விவகாரம்: ம.உ.ஆ குழுவில் 157 முறைப்பாடுகள்! - sonakar.com

Post Top Ad

Monday, 24 June 2019

முஸ்லிம் பெண்கள் ஆடை விவகாரம்: ம.உ.ஆ குழுவில் 157 முறைப்பாடுகள்!பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பின்னணியில் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கி வரும் சவால்களின் பின்னணியில் ஐந்து பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பொது சேவை ஊழியர்கள் உள்ளடங்கலாக 157 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தளம் நகரபிதா கே.ஏ பாயிஸ் சோனகர்.கொம் நேரலையில் தகவல் வெளியிட்டார்.புத்தளம், கல்பிட்டி, வனாத்தவில்லு, கருவலகஸ்வேவ மற்றும் முந்தல் பிரதேச செயலகங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்தே இவ்வாறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல் செய்வதற்கான பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றைய நேரலையில் கலந்து கொண்டு, புத்தளம் நகரபிரதா கே.ஏ. பாயிஸ் தெரிவித்த கருத்துக்களை கீழ்க்காணும் காணொளியில் காணலாம்.

No comments:

Post a Comment