ரிசாத் - அசாத் - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 June 2019

ரிசாத் - அசாத் - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்


முன்னாள் ஆளுனர்கள் ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்ய இன்றைய தினம் மாலை 4 மணி வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவுற்றுள்ள நிலையில் 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், இவற்றில் தீவிரவாத குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டிருக்கிறதா என்பது  சந்தேகத்துக்கிடமாக இருக்கின்ற அதேவேளை ரிசாத் பதியுதீனின் பொறுப்பிலிருந்த அமைச்சு வாகனங்கள் தீவிரவாதிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.பி. திசாநாயக்க தவிரவும் உதய கம்மன்பிலவும் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முறையிட்டுள்ளதாகவும் மொத்தம் 11 முறைப்பாடுகள் ரிசாதுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்படுகின்றமையும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment