2014/15 காலப்பகுதியில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற அரசி இறக்குமதியில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் வாக்கமூலம் பெற்றுள்ளது நிதி மோசடி விசாரணைப் பிரிவு.
குறித்த காலப்பகுதியில் 257,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் போது முறைகேடு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பின்னணியில் காலை 10 மணி முதல் மாலை 4.50 மணி வரை ரிசாத் பதியுதீன் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்ததுடன் அங்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment