நாட்டு மக்களை அரசாங்கம் பாதுகாக்கத் தவறிவிட்டதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
அனைத்து மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பென 'சுட்டிக்காட்டியுள்ள' அவர், பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்து சேதங்கள் உருவாகியுள்ளமை நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை எடுத்துக்காட்டுவதாகவும் அரசு மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் மஹிந்த தெரிவிக்கிறார்.
இதேவேளை, மினுவங்கொட வன்முறையின் போது கோட்டாபே ராஜபக்சவின் சகா மது மாதவ அப்பகுதியில் நடந்து செல்வது வீடியோவில் பதிவாகியிருந்ததோடு அங்கு தான் சென்றதை ஏற்றுக்கொண்ட மது மாதவ, போக்குவரத்து நெரிசலால் நடந்து சென்றதாக விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment