ஜித்தா இலங்கைத் தூதரகத்தின் இப்தார் நிகழ்வு இரத்து! - sonakar.com

Post Top Ad

Wednesday 15 May 2019

ஜித்தா இலங்கைத் தூதரகத்தின் இப்தார் நிகழ்வு இரத்து!


சவுதி அரேபியா, ஜித்தா நகரில் இயங்கும் இலங்கைத் தூதரகம் நாளை மறுதினம் 17ம் திகதி ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வினை இரத்துச் செய்துள்ளது.


தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பல நாடுகளில் இம்முறை தூதரக நடவடிக்கைகளை புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கத் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.

நாட்டில் கடந்த சில தினங்களாக முஸ்லிம்கள் அச்ச சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதுடன் பாதுகாப்பு தரப்பின் உதவியைப் பெற்று வன்முறையாளர்கள் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களைத் தாக்கியுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment