இன்சாபின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மீண்டும் நீதிமன்ற அழைப்பாணை! - sonakar.com

Post Top Ad

Wednesday 22 May 2019

இன்சாபின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மீண்டும் நீதிமன்ற அழைப்பாணை!


ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுள் ஒருவனான இன்சாப் இப்ராஹிமின் வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட எண்மருக்கு மீண்டும் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.



பொலிசார் போதிய சாட்சியங்களை முன் வைக்காத நிலையில் பிணை வழங்கப்பட்டதாகவே முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் 27ம் திகதி குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார் கொழும்பு கூடுதல் மஜிஸ்திரேட் பிரியந்த லியனகே.

No comments:

Post a Comment