சஹ்ரான் பாவித்ததாகக் கருதப்படும் மடிக்கணணி மற்றும் 35 லட்ச ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
கல்முனை சியாமிடம் விசாரிக்கப்பட்டதன் பின்னணியில், கிடைக்கப் பெற்ற தகவல் அடிப்படையில் அட்டாளைச்சேனை பகுதியில் பதுக்கி வைத்ததாகக் கருதப்படும் குறித்த தொகை பணம் தவிர ஏலவே மேலும் ஒரு தொகை பணம் சியாமின் தகவல் அடிப்படையில் மீட்கப்பட்டிருந்தது.
சஹ்ரானின் சகோதரன் சைனி குறித்த கணிணியையும் பணத்தையும் தன்னிடம் ஒப்படைத்ததாக சியாம் விசாரணையின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment