அவசர கால சட்டத்தை மீண்டும் நீட்டிக்கும் எண்ணமில்லை: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday 27 May 2019

அவசர கால சட்டத்தை மீண்டும் நீட்டிக்கும் எண்ணமில்லை: மைத்ரி


ஜுன் மாதம் 22ம் திகதி வரை அமுலில் இருக்கும் அவசர கால சட்டத்தை மீண்டும் நீட்டிக்கும் எண்ணம் எதுவுமில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை அவசரகால சட்டத்தை நீட்டித்து அதனூடாக தேர்தலை பின் போடுவதே நோக்கம் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் லண்டன் சென்றிருந்த பவித்ரா வன்னியாராச்சி, எதிர்பார்க்கப்படும் இரு தேர்தல்களையும்  நடாத்தினாலே அது ஜனநாயகத்துக்குக் கிடைக்கும் வெற்றியென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment