திகனயில் ஆர்ப்பாட்டம் நடாத்த மகசோன் பலகாயவுக்குத் தடை! - sonakar.com

Post Top Ad

Friday, 10 May 2019

திகனயில் ஆர்ப்பாட்டம் நடாத்த மகசோன் பலகாயவுக்குத் தடை!


நாளைய தினம் திகன பகுதியில் பேரினவாதி அமித் வீரசிங்க தலைமையில் ஏற்பாடாகியிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.தீவிரவாதத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எனும் பேரில் ஏற்பாடான குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு தெல்தெனிய  மஜிஸ்திரேட் இவ்வாறு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் அமித் வீரசிங்கவின் தூண்டுதலில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் பின்னணியில் குறித்த நபர் ஆறு மாத காலம் சிறைவாசம் அனுபவித்திருந்த போதிலும் தொடர்ந்தும் இன வெறுப்பூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- A. Basheer

No comments:

Post a Comment