நான் களைத்து விட்டேன்: இனி ஆன்மீக வாழ்க்கை: ஞானசார - sonakar.com

Post Top Ad

Thursday, 23 May 2019

நான் களைத்து விட்டேன்: இனி ஆன்மீக வாழ்க்கை: ஞானசாரநாட்டுக்காகக் குரல் கொடுத்துத் தான் களைத்து விட்டதாகவும் இனி வரும் காலங்களில் ஆன்மீக வாழ்க்கையின் பால் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவிக்கிறார் ஞானசார.


ஜனாதிபதியின் பொது மன்னிப்புடன் சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள ஞானசார, நீதிமன்ற அவமதிப்பின் கீழேயே சிறைச்சாலையில் வைத்து பராமரிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தாம் இதற்கு முன் சொல்லி வந்தவை அனைத்தும் உண்மையாகியுள்ளதாகவும், நாடொன்று இருந்தால் தான் அந்த நாட்டுக்காகவேண்டியாயினும் போராட முடியும் என்பதால் அதனை சிந்தித்து மக்கள் நடக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment