டிஜிட்டல் மயமாகும் மேல் மாகாண சபை அலுவலக நடவடிக்கைகள் - sonakar.com

Post Top Ad

Monday, 27 May 2019

டிஜிட்டல் மயமாகும் மேல் மாகாண சபை அலுவலக நடவடிக்கைகள்


மேல் மாகாண சபையின் அலுவலக நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஆளுனர் அசாத் சாலி.



இதனூடாக அலுவலக நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறுவதுடன் பெருந்தொகை பணம் சேமிக்கப்படும் எனவும் பணியாளர்கள், அதிகாரிகள் இடத்துக்கிடம் பயணிக்கும் தேவைகளும் குறையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதம செயலாளர் அலுவலகம், ஐந்து அமைச்சுகள், பொது சேவை ஆணைக்குழு மற்றும் ஆளுனர் அலுவலகம் உட்பட்ட இடங்களில் பணி புரியும் சுமார் 86,000 பேர் இதனூடாகப் பயனடைவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-M. Rasooldeen

No comments:

Post a Comment