நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இராணுவம் தற்காலிகமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு வரும் கருத்துக்களை நிராகரித்துள்ள இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க, தமக்கு அவ்வாறு எந்த எண்ணமுமில்லையென தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைவாக இராணுவம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மக்கள் இராணுவத்தின் சேவையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதற்கேற்ப கௌரவமான முறையில் தமது பணி தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச தலைமைகளுக்குள் நிலவும் அதிகார போட்டியில் புலனாய்வுத் தகவல்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமையும் அதன் பின்னும் பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்ததன் பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதோடு தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment