தோட்டாக்களுடன் கைதான நிதியமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விடுதலை - sonakar.com

Post Top Ad

Wednesday 29 May 2019

தோட்டாக்களுடன் கைதான நிதியமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விடுதலை


துப்பாக்கித் தோட்டாக்களுடன் கைதான நிதியமைச்சின் ஊடக பணிப்பாளர் ஹசன் அலி விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.மல்வானை. பியகம பகுதியில் குறித்த நபரின் வீட்டிலிருந்து 93 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நபரின் மாமனார் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவருக்கு சொந்தமான நிலப்பகுதியிலிருந்தே தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment