கெகிராவ: பிரதேச வாசிகளால் 'தவ்ஹீத்' பள்ளி உடைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 29 May 2019

கெகிராவ: பிரதேச வாசிகளால் 'தவ்ஹீத்' பள்ளி உடைப்பு


கெகிராவ, மடாட்டுகம பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த தவ்ஹீத் அமைப்பினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த பள்ளிவாசல் பிரதேசவாசிகளால் உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறுவர்களுக்கான நூலகம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வெளிநாட்டு நிதியுதவியில் உருவாக்கப்பட்டு இப்பள்ளிவாசல் இயங்கி வந்ததாகவும் பிரதேசத்தில் மேலதிகமாக இவ்வாறு ஒரு பள்ளிவாசல் தேவையில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பள்ளிவாசல் பெயரிடப்படாமலே இயங்கி வந்ததாகவும் மடாட்டுகம ஜும்மா பள்ளிவாசல் பிரதேச மக்களின் தேவைக்குப் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment