ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழு - sonakar.com

Post Top Ad

Thursday 23 May 2019

ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழு


ஈஸ்டர் தாக்குதலை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க எட்டு உறுப்பினர்களைக் கொண்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.சரத் பொன்சேகா, ரவுப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, காவிந்த ஜயவர்தன, அசு மாரசிங்க, ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் இக்குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயகர் இன்று அறிவித்துள்ளார்.

மூன்று மாத காலத்துக்குள் பூரணமான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment