இன்னுமொரு கருப்பு ஜுலைதான் அவர்களின் இலக்கு: மங்கள - sonakar.com

Post Top Ad

Friday 24 May 2019

இன்னுமொரு கருப்பு ஜுலைதான் அவர்களின் இலக்கு: மங்கள


நான் பொளத்த சித்தார்ந்தத்தைப் பின்பற்றுகிறவனே தவிர, பௌத்தன் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லையென தெரிவித்துள்ளார் அமைச்சர் மங்கள சமரவீர.பௌத்தம் என்பது மதம் இல்லை, புத்தரின் போதனைகள் என தெளிவுபடுத்தியுள்ள அவர், புத்தரின் போதனைகள் சிங்கள இனத்துக்கு மாத்திரம் உரியதன்று எனவும் உலகின் அனைவருக்கும் சொந்தம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

பௌத்தத்தின் பெயரில் இயங்கும் மகசோன் பலகாய போன்ற தீவிரவாத அமைப்புகள் இன்னுமொரு கருப்பு ஜுலையை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறார்கள் எனவும் மங்கள தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment