குருநாகல மருத்துவருக்கு எதிராக 20 முறைப்பாடுகள் - sonakar.com

Post Top Ad

Monday, 27 May 2019

குருநாகல மருத்துவருக்கு எதிராக 20 முறைப்பாடுகள்


சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக் குவிப்பு செய்த குற்றச்சாட்டில் கைதான குருநாகல மருத்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளருமான மருத்துவர் ஷாபி தொடர்பில் நேற்றும் இன்றும் (இதுவரை) 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குருநாகல வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கிறார்.சத்திர சிகிச்சை (சிசேரியன்) யின் போது கருத்தடை ஆகும் வகையில் குறித்த மருத்துவர் சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை முறையிடுமாறு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் ஐவரும் இன்று (இதுவரை) 15 பேரும் இவ்வாறு முறையிட்டுள்ளதாக பணிப்பாளர் சரத் வீரபண்டார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment