13ம் திகதி பற்றி எந்த அச்சமும் தேவையில்லை: பாதுகாப்பு செயலாளர் - sonakar.com

Post Top Ad

Sunday 12 May 2019

13ம் திகதி பற்றி எந்த அச்சமும் தேவையில்லை: பாதுகாப்பு செயலாளர்


13ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென தெரிவிக்கிறார் பாதுகாப்பு செயலாளர்.ஈஸ்டர் தாக்குதலையடுத்து கடந்த மூன்று வாரங்களாக நாட்டில் அச்ச சூழ்நிலை தொடர்கின்ற அதேவேளை நாளை 13ம் திகதி மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என ஊகங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையிலேயே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, பொதுமக்கள் முக்கிய தகவல்கள் இருப்பின் அவற்றைத் தமக்கு நேரடியாக தெரிவிக்குமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment