வெதிகந்த 'கசுன்' வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday 7 March 2019

வெதிகந்த 'கசுன்' வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மீட்பு


அண்மையில் வத்தளையில் கைது செய்யப்பட்டிருந்த வெதிகந்த கசுன் என அறியப்படும் பாதாள உலக பேர்வழியின் வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


மாகந்துரே மதுஷ் டுபாயில் கைதானதையடுத்து பல பாதாள உலக பேர்வழிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்பின்னணியில் கைதான கசுனின் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையிலேயே இவ்வாறு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பன்னிப்பிட்டியவில் பொலிஸ் சீருடையில் சென்று இரத்தினக் கல் கொள்ளையடித்த சம்பவத்தின் தொடர் விசாரணையிலேயே மதுஷின் சகாக்கள் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment